Trees in Bible

123456789101112131415161718
Across
  1. 3. எந்த செடிகளின் இரைச்சலைக் கேட்டும்போது, பெலிஸ்தருக்கு எதிராக எழும்பிப்போ என்று கர்த்தர் தாவீதிடம் சொன்னார் ?
  2. 6. எசேக்கியா ராஜா பிழைக்கும்படி எந்தப் பழத்தின் அடையினால் பற்றுப்போடப்பட்டது?
  3. 7. : ஆரோனின் அங்கியின் ஓரங்களில், சுற்றிலும் பொன்மணியுடன் இடம்பெற்ற பழம் என்ன?
  4. 12. சீயோன் குமாரத்தி எந்த தோட்டத்திலுள்ள குடிசைப் போல மீந்திருக்கிறாள்?
  5. 13. இஸ்ரவேல் ஜனங்கள் பாளயமிறங்கின எலிம் என்ற இடத்திலே பன்னிரண்டு நீருற்றுகளும், எந்த மரங்களும் இருந்தது?
  6. 14. தீர்க்கதரிசிகளின் புத்திரருக்கு கூழ்காய்த்த பானையில் எந்த காய்களின் நிமித்தம் உண்டான தோஷத்தை, எலிசா இல்லாமற் போகப்பண்ணினார்?
  7. 17. ஆதாமும் ஏவாளும் எந்த மரத்தின் இலைகளைத் தைத்து தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்னினார்கள்?
  8. 18. நேசத்தால் சோகமடைந்த சூலமித்தி, எந்தப் பழங்களால் தன்னை ஆற்றும்படி தன் தோழிகளிடம் கூறினாள்?
Down
  1. 1. தன்னுடைய ஆடுகள் புள்ளியும் வரியுனை குட்டிகளைப் போடும்படி, யாக்கோபு எந்த மரங்களின் கொப்புகளை வெட்டி அவைகளின் முன்பாக போட்டுவைத்தான்?
  2. 2. தாவீதுக்கு வீடு கட்டும் படி, தீருவின் ராஜாவாகிய ஈராம் எந்த மரங்களை அனுப்பினான்?
  3. 4. இஸ்ரவேல் புத்திரரை நியாயம் விசாரித்த தீர்க்கதரிசியான தெபொராள் எந்த மரத்தின் கீழ் குடியிருந்தான் ?
  4. 5. வனாந்திரத்தில் எவைகளைக் கண்டுபிடிப்பது போல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்?
  5. 8. தேவன் மோசேயிடம் கட்டளைகளைக் கொடுக்கும் போது. எந்த மரத்தின் கொம்பிலே தப்பியிருக்கிறதைப் பறிக்காமல் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக என்றார் ?
  6. 9. கேதுருமரங்களை: முட்செடியானது, என் நிழவிலே வந்தடையுங்கள், இல்லாவிட்டால் என்னிலிருந்து அக்கினி புறப்பட்டு எந்த மரங்களைப் பட்சிக்ககடவது என்றது?
  7. 10. தான் மந்தை மேய்க்கிறவனும், எந்த பழங்களைய பொறுக்குகிறவனுமாயிருந்தேன் என்று அமத்தியாவிடம் ஆமோஸ் கூறினான் ?
  8. 11. கிபியாவின் மிக்ரோனிலே சவுல் எந்த மரத்தின் கீழ் இருந்தான்?
  9. 15. பெத்தேலுக்கு போகும் முன்பு, தங்களைச் சுத்தம் பண்ணிக் கொள்ள, தங்கள் கையில் இருந்த அந்நிய தெய்வங்களையும், காதாணிகளையும் எந்த மரத்தின் கீழ் யாக்கோபு புதைத்துப் போட்டான்?
  10. 16. எந்தப்பழத்தை, ஆலையாடின போதும் அதின் எண்ணெய்யை நீ பூசிக்கொள்வதில்லை என்று மீகா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது?